/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., வினர் கொண்டாட்டம் கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., வினர் கொண்டாட்டம்
கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., வினர் கொண்டாட்டம்
கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., வினர் கொண்டாட்டம்
கருணாநிதி பிறந்த நாள் விழா தி.மு.க., வினர் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2024 12:54 AM

திருப்பூர்;தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள அண்ணாதுரை சிலை, மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்துக்கு தி.மு.க., வினர் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
விழாவில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் நாகராஜன், மேயர் தினேஷ்குமார், மாவட்ட, நகர, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
* திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு தி.மு.க சார்பில், ரங்கநாதபுரம், சிறு பூலுவப்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த விழாவில், வார்டு செயலாளர் ராம்குமார், நிர்வாகிகள் சாதிக், செல்வகுமார், மதிவாணன், நாகராஜ், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
---------------------
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், கருணாநிதி படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.