/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் திருப்பூரில் புதிய கிளை திறப்பு எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் திருப்பூரில் புதிய கிளை திறப்பு
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் திருப்பூரில் புதிய கிளை திறப்பு
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் திருப்பூரில் புதிய கிளை திறப்பு
எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் திருப்பூரில் புதிய கிளை திறப்பு
ADDED : ஜூன் 10, 2024 02:12 AM

திருப்பூர்;ஈரோடு மாநகரை தலைமையிடமாக கொண்டு எஸ்.ஆர்.எம்., ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் நிறுவனம் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருச்செங்கோடு, நாமக்கல், பெருந்துறை மற்றும் திருப்பூர் பல்லடம் ரோடு மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வருகிறது.
தற்போது, புதிய கிளை திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகர் விநாயகர் கோவில் அருகே நேற்று திறக்கப்பட்டது. உரிமையாளர் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மணிமேகலை மகுடீஸ்வரன், நிறுவன இயக்குனர்களான சுடர்வண்ணன் - தாரணி, பரணிதரன்-சுரசிந்து முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் 'சைமா' தலைவர் ஈஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருப்பூர் ஏ1 எஸ்.கே.சி., புட் புராடக்ட்ஸ் நிறுவன தண்டபாணி, ஏ.வி.பி., கல்விக்குழு தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
முதல் விற்பனையை திருப்பூர் ஸ்பிக் ஸ்பின்னிங் மில்ஸ் குழும சேர்மன் முத்துசாமி துவக்கி வைத்தார். திருப்பூர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, ரேவதி மருத்துவமனை சேர்மன் ஈஸ்வரமூர்த்தி, வைகிங் நிட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் அருணாசலம் ஆகியோர் பெற்று கொண்டனர்.
விழாவில், கொங்கு மெட்ரிக் பள்ளி செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.