ADDED : ஜூன் 10, 2024 02:12 AM
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். பல்லடம் ரோடு, நொச்சிபாளையம் அருகே கஞ்சா விற்பனைக்காக சப்ளை செய்யப்படுவதாக திருப்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் சந்தேகப்படும் விதமான, இருவரிடம் விசாரித்தனர்.
ஒடிசாவை சேர்ந்த மனோரஞ்சன் நஹாக், 27, துலாமணி மாலிக், 34 என்பதும், ஒருவர், அனுப்பர்பாளையம் மற்றும் மற்றொருவர் அருள்புரத்தில் தங்கியுள்ளனர். ஊரில் இருந்து ரயில் மூலம் திருப்பூருக்கு கஞ்சா விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.