/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ தங்க மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 12, 2024 10:44 PM

அவிநாசி : அவிநாசி அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதங்க விநாயகர், ஸ்ரீதங்க முருகன், ஸ்ரீதங்க மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், 10ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை, ஸ்ரீ தங்க விநாயகர், ஸ்ரீ தங்க மாரியம்மன், ஸ்ரீ தங்க முருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சார்யார் விஜயகுமார சிவம் சர்வசாதகம் செய்து வைத்தார். திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.