/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்லுாரி அருகே சாலையில் வேகம் பள்ளி அருகே சாலையோ மோசம் கல்லுாரி அருகே சாலையில் வேகம் பள்ளி அருகே சாலையோ மோசம்
கல்லுாரி அருகே சாலையில் வேகம் பள்ளி அருகே சாலையோ மோசம்
கல்லுாரி அருகே சாலையில் வேகம் பள்ளி அருகே சாலையோ மோசம்
கல்லுாரி அருகே சாலையில் வேகம் பள்ளி அருகே சாலையோ மோசம்
ADDED : ஜூன் 24, 2024 01:23 AM

பார்க்கிங் தாறுமாறு
அவிநாசி, கிழக்கு ரத வீதி, சிந்தாமணி பஸ் ஸ்டாப் சந்திப்பில், டூவீலர், கார்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுகின்றன. பிற வாகனங்கள் நகர்ந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது.
- சந்திரமோகன், கிழக்கு ரத வீதி.
விபத்து அபாயம்
திருப்பூர் மங்கலம் ரோடு, குமரன் கல்லுாரி சந்திப்பு சாலை, நால்ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- யோகா, மங்கலம் ரோடு.
வாகனங்கள் அதிவேகம்
பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனாம்பாறையில் சந்து வீதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும்.
- செல்வராஜ், மீனாம்பாறை. (படம் உண்டு)
சாலை சீராகுமா?
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி ரோடு சேதமடைந்து உள்ளது. பள்ளிக்கு வாகனங்களில் வருவோர் தடுமாறுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.
- மாரிமுத்து, காதர்பேட்டை. (படம் உண்டு)
கழிவுநீர் தேக்கம்
திருமுருகன்பூண்டி அடுத்த பெரியாயிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பொருட்கள் போட்டு வைத்துள்ள இடத்தில் கழிவுநீர் தேங்குவதால் பணி மேற்கொள்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
- ஆறுமுகம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 55வது வார்டு, தெய்வானையம்மாள் லே-அவுட் முதல் வீதியில், கால்வாயில் குப்பை தேங்குவதால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- கோமதி, தெய்வானையம்மாள் லே-அவுட். (படம் உண்டு)
துவங்காத பணி
திருப்பூர், 39வது வார்டு, சின்னாண்டிபாளையம், சிவபுரத்தில் ரோடு போட ஜல்லிக்கொட்டி பல நாட்களாகி விட்டது. ரோடு போட வேண்டும்.
- செல்வி, சிவபுரம். (படம் உண்டு)
மூடப்படாத குழி
பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, கருக்கங்காட்டுப்புதுார் துவக்கப்பள்ளி செல்லும் சாலையில் குழி தோண்டப்பட்ட பல மாதங்களாகியும் சரிவர மூடவில்லை.
- சரவணன், கருக்கங்காட்டுப்புதுார். (படம் உண்டு)
அகலாத மரம்
திருப்பூர் பார்க்ரோடு நடைபாதையில் மரம் விழுந்து மாநகராட்சி மூலம் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)
எரியாத விளக்கு
திருப்பூர் மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் துவங்கி, கருவம்பாளையம் விநாயகர் கோவில் வரை ஒரு வாரமாக தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- ஆனந்த், கருவம்பாளையம். (படம் உண்டு)
காத்திருக்கும் ஆபத்து
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் சந்திப்பில், சிக்னல் கம்பம் ஒரு வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.
- சுரேஷ்குமார், ராம்நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
வெளிச்சம் கிடைத்தது
திருப்பூர், தாராபுரம் ரோடு, ெஷரீப் காலனி வழி, குறிஞ்சி நகர் எக்ஸ்டென்சனில் தெருவிளக்கு மூன்று மாதமாக எரியாமல் இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், தெருவிளக்கு சரிசெய்து விட்டனர்.
- அருணாச்சலம், குறிஞ்சி நகர்.
திருப்பூர், செங்குந்தபுரம் பகுதியில் அடிக்கடி தெருவிளக்கு பழுதாகி, கும்மிருட்டாகவே இருந்தது. செய்தி வெளியானதும், தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு, தற்போது எரிகிறது.
- அருண், செங்குந்தபுரம். (படம் உண்டு)
உடைப்பு சீரமைப்பு
திருப்பூர், ஈஸ்வரமூர்த்தி லே-அவுட்டில் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகியது. செய்தி வெளியானதை தொடர்ந்து, குழாய் உடைப்பு சீரமைப்பு பணி மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
- குமார், ஈஸ்வரமூர்த்தி லே-அவுட். (படம் உண்டு)