Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறப்பு ரயில்கள் எண் மாற்றம் உத்தரவு திரும்ப பெறப்பட்டது

சிறப்பு ரயில்கள் எண் மாற்றம் உத்தரவு திரும்ப பெறப்பட்டது

சிறப்பு ரயில்கள் எண் மாற்றம் உத்தரவு திரும்ப பெறப்பட்டது

சிறப்பு ரயில்கள் எண் மாற்றம் உத்தரவு திரும்ப பெறப்பட்டது

ADDED : ஜூன் 24, 2024 01:04 AM


Google News
திருப்பூர்:'ஜூலை 1 முதல் சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்படும்' என்ற உத்தரவை, ரயில்வே திடீரென திரும்ப பெற்றது. பயணக் கட்டணம் குறையுமென எதிர்பார்த்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் போது, பொது போக்குவரத்து முடங்கியதால், நாடு முழுதும் பல்வேறு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. முக்கிய நகரங்களை இணைக்கும், குறுகிய துார சாதாரண கட்டண ரயில்கள், சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டதோடு, கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.

வரும், ஜூலை 1 முதல், தெற்கு ரயில்வேயில் இயங்கும், 296 சிறப்பு ரயில்களின் எண்கள் மாற்றப்படும். 'பூஜ்ஜியத்தில் துவங்கும் வகையில் வழங்கப்பட்ட ரயில் எண்கள், 5, 6 மற்றும் 7 என்ற இலக்கத்தில் துவங்கும் வகையில் மாற்றப்படும்' என அறிவிக்கப்பட்டது. சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டபோது, குறைந்தபட்ச கட்டணம், 30 ரூபாயாக இருந்தது. எண்கள் மாற்றப்பட்டால், கட்டணம் 10 ரூபாயாக குறையுமென என ரயில் பயணிகள் எதிர்பார்த்தனர்.

இதற்கிடையே கடந்த 11ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை, கடந்த 21ல் ரயில்வே வாரியம் திடீரென திரும்ப பெற்றது. 'இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை' என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.அதேசமயம், கட்டணம் குறையும் என்று எதிர்பார்த்த பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us