/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு கலை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்அரசு கலை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
அரசு கலை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
அரசு கலை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
அரசு கலை கல்லுாரியில் சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 08, 2024 01:49 AM
உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 'தன்முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுல் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதன் ஒரு பகுதியாக, சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
வேதியியல் துறை பேராசிரியர் திருமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். உடுமலை மனவளக்கலை மன்றத்தின் சார்பில், உடற்பயிற்சி மற்றும் தியான பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் தெற்கு தாசில்தார் கவுரிசங்கர் 'தன்முன்னேற்ற சிந்தனைகள்' என்ற தலைப்பில் பேசினார். பல்லடம் மண்டல துணைதாசில்தார் சுப்ரமணியம் வேலைவாய்ப்புகள் குறித்தும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராவது பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மனோகர்செந்துார்பாண்டி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியை, கணிதவியல் துறை பேராசிரியர் முகமதுஅலிஜாபர் ஒருங்கிணைத்தார்.