ADDED : ஜூலை 08, 2024 01:50 AM
உடுமலை; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க வட்டகிளைக் கூட்டம் நடந்தது.
உடுமலையில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க, வட்டக்கிளை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
கருவூலத்தில் நேர்காணலின் போது ஓய்வூதிய புத்தகத்தில் பதிவு செய்தல், மருத்துவ காப்பீட்டு திட்டம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர்களுக்கான சுற்றுலா திட்டம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர்.
சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள், உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். பொருளாளர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்.