சிறிய ஜவுளி பூங்கா பெரிய நன்மைகள்
சிறிய ஜவுளி பூங்கா பெரிய நன்மைகள்
சிறிய ஜவுளி பூங்கா பெரிய நன்மைகள்
ADDED : ஜூன் 12, 2024 10:31 PM
திருப்பூர் : நாடு முழுவதும், சிறு ஜவுளி பூங்காக்களை உருவாக்கி, தொழில் துவங்க மானியத்துடன் சலுகை வழங்க வேண்டுமென, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் அறிக்கை:
ஜவுளி தொழிலுக்கு தனி அமைச்சர் நியமனம் செய்துள்ள பிரதமருக்கு நன்றி. இந்தியாவில் ஜவுளி தொழில் மேம்பட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாட்டில், 50 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; அவற்றை மீண்டும் இயக்க, நிபந்தனையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்றுமதி பிரிவுக்கான வட்டி விகித்தை குறைக்க வேண்டும்.
புதிய வர்த்தக வாய்ப்புகளை கவர்ந்திழுக்க, வெளிநாடுகளில் ஜவுளி கண்காட்சி நடத்த வேண்டும்; ஏற்றுமதி வர்த்தகத்துக்கான ஊக்கத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். பருத்தி பஞ்சு இறக்குமதிக்கான வரியை முழுமையாக நீக்க வேண்டும்; நாடு முழுவதும், சிறு ஜவுளி பூங்காக்களை உருவாக்கி, தொழில்துவங்க மானியத்துடன் சலுகை வழங்க வேண்டும். ஜவுளித்தொழிலுக்கு தனி வாரியம் அமைத்து, இறக்குமதி செய்யும் நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும். பருத்தி ஆடையை, இந்திய தேசிய ஆடையாக அறிவிக்க வேண்டும். பருத்தி நுால் ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.
மூலப்பொருள் பருத்தியை ஏற்றுமதி செய்யாமல், முழுமையான ஜவுளியாக மாற்றி, ஏற்றுமதி செய்ய வேண்டுமென உத்தரவிட வேண்டும்.