/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொடாமலே 'ஷாக்' அடிக்குது! புதிய மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சி பனியன் தொழில் துறையினர் பெருங்கவலை தொடாமலே 'ஷாக்' அடிக்குது! புதிய மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சி பனியன் தொழில் துறையினர் பெருங்கவலை
தொடாமலே 'ஷாக்' அடிக்குது! புதிய மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சி பனியன் தொழில் துறையினர் பெருங்கவலை
தொடாமலே 'ஷாக்' அடிக்குது! புதிய மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சி பனியன் தொழில் துறையினர் பெருங்கவலை
தொடாமலே 'ஷாக்' அடிக்குது! புதிய மின் கட்டண உயர்வால் பேரதிர்ச்சி பனியன் தொழில் துறையினர் பெருங்கவலை
ADDED : ஜூலை 16, 2024 10:51 PM
திருப்பூர்:பழைய போராட்டத்துக்கு முடிவு ஏதும் கிடைக்காத நிலையில், மீண்டும் மின் கட்டண உயர்வு செய்துள்ளது, பனியன் தொழில் துறையினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்துறையினரின் எட்டு மாத போராட்டத்துக்கு பின்னரும் கூட, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே, தமிழகத்தில் தான் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகம் உள்ளன. மின் கட்டணத்தை உயர்த்துவதால், தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை உயர்த்திய, 'பீக் ஹவர்' மின் கட்டணம், 'நிலை கட்டண உயர்வுகளை திரும்ப பெற வலியுறுத்தி, எட்டு கட்ட போராட்டம் நடத்தியும், பயனில்லை. தமிழக அரசு, தேர்தலுக்கு பின், கோரிக்கை தொடர்பாக பேசலாம் என்று தெரிவித்திருந்தது. பழைய கோரிக்கை நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, தொழில்துறையினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
-------------
கருணை காட்ட வேண்டும்!
திருப்பூர் பனியன் தொழில், பல்வேறு சவால்களை கடந்து, இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. தமிழக அரசு, மின் கட்டண உயர்வை திரும்ப பெற கருணை காட்ட வேண்டும்.
- சுப்பிரமணியன்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்
-------------
தாங்க முடியாத சுமை...
கடுமையான மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என, ஏற்கனவே கடும் போராட்டம் நடத்தினோம். தொழில் நடத்த முடியாத அளவுக்கு, மின் கட்டணம் பெரும் சுமையாக இருக்கிறது. பல்வேறு மாநிலங்கள், மின் கட்டண சலுகை அளித்து, தொழில்துவங்க அழைக்கின்றன; இந்நிலையில், தமிழகத்தில் இயங்கும் தொழில்களுக்கு மின் கட்டண சுமை தாங்க முடியாததாக மாறியிருக்கிறது. மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பதால், தொழிலை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும்; தமிழக அரசு முன்வந்து, கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
- ஈஸ்வரன்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள்
(சைமா) சங்க தலைவர்
--------------
வாபஸ் பெற வேண்டும்
- முத்துரத்தினம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும்
உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர்
தமிழகத்தில் உள்ள தொழில்களை, பல்வேறு மாநிலங்களுக்கு நகர்த்திச்செல்ல முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்ப, தமிழக அரசும் மின் கட்டணத்தை உயர்த்திவிட்டதாக, தொழில்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூரில், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன; ஏற்கனவே, கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில், மின் கட்டண உயர்வால் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
- முத்துரத்தினம்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும்
உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர்
-------------
போட்டித்திறன் குறையும்
மின் கட்டண உயர்வு, பல்வேறு நாடுகளுடன் போட்டியிடும் திறனை குறைத்துவிடும். ஒட்டுமொத்த பனியன் தொழிலை பொறுத்தவரை, மின்சாரம் என்பது உயிர் போன்றது. அபரிமிதமான மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டுமென, தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு இல்லை. தேர்தலுக்கு பிறகு தீர்வு காணலாம் என்று அரசு தரப்பு தெரிவித்திருந்தது; தற்போது, மீண்டும் மின் கட்டணம் உயர்த்தியது, அதிர்ச்சி அளிக்கிறது. குறு, சிறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.
- ஸ்ரீகாந்த்
'டெக்பா' தலைவர்
-------------
தொழில் அழியும் அபாயம்
பழைய கோரிக்கை மீதான போராட்டத்துக்கே தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் 6 சதவீத மின் கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் முதுகெலும்பாக உள்ள, குறு, சிறு தொழில்களை பாதுகாக்க, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில், குறு, சிறு தொழில்களுக்கு, மின் கட்டணம் மற்றும் வரி விதிப்பில் சலுகை காட்ட வேண்டும். மின் கட்டண உயர்வால், குறு, சிறு தொழில்கள் அழியும் அபாயம் உள்ளது.
- கோபிநாத் பழநியப்பன்
'நிட்மா' சங்க இணை செயலாளர்
---------------
மானியம் வழங்கணும்!
பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, மின் கட்டண சுமை தாங்க முடியாததாக மாறியிருக்கிறது. சோலார் மின் கட்டமைப்பு அமைக்க மானியம் வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். பழைய மின் கட்டண சுமையை, சுமக்க முடியாததாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாக மின் கட்டணத்தை உயர்த்துவது அதிர்ச்சி அளிக்கிறது; தமிழக அரசு, தாயுள்ளத்துடன் பரிசீலித்து, குறு, சிறு தொழில்களுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
- காந்திராஜன்
சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்
--------------
வெந்த புண்ணில் வேல் போல...
தமிழக அரசு, அனைத்து தொழில்களுக்கும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். சோலார் வசதி செய்ய விரைந்து அனுமதிக்க வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 'பீக்ஹவர்' மற்றும் நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் செய்துள்ள, தற்போதைய மின் கட்டண உயர்வையும் வாபஸ் பெற வேண்டும்.
- ராமசாமி
திருப்பூர் 'ரைசிங்' சங்க தலைவர்
---------------
பல்வேறு சோதனை
ஒட்டு மொத்த எலாஸ்டிக் தொழிற்சாலைகளும், குறு, சிறு தரத்துடன் இயங்கி வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்டர் இல்லாமலும், பல்வேறு சோதனையால் தொழில் நலிவடைந்துள்ளது. இருப்பினும், மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. தமிழக அரசு பரிசீலித்து, கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
- கோவிந்தசாமி
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும்
விற்பனையாளர் சங்க தலைவர்