/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 13, 2024 07:29 AM
திருப்பூர்: காங்கயத்தில், 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.
ஊத்துக்குளியை சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவரது தாய், இரண்டாவதாக, 40 வயது மதிக்கத்தக்க நபரை திருமணம் செய்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு மார்ச், 15ம் தேதி தனியாக இருந்த மகள் உறவு உள்ள, 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, தொடர்ந்து அத்துமீறி வந்தார். இதுகுறித்து சிறுமியின் பாட்டிக்கு தெரிய வந்தது. புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார், 40 வயது நபரை 'போக்சோ' வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.