ADDED : ஜூன் 13, 2024 07:30 AM
தபால்துறை் சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியவும், அவ்வப்போது, மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். திருப்பூர் கோட்ட அளவில் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள், தங்கள் கருத்துகளையும், புகார்களையும், 19ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்கலாம்.
'கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் -641 601 என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக கருத்துக்கள் மற்றும் புகார்களை அனுப்பி வைக்கலாம். தபால் உறை மீது,' DAK ADALAT CASE' என்று எழுதி அனுப்ப வேண்டுமென, தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.