ADDED : ஆக 06, 2024 10:04 PM
உடுமலை : தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கத்தின், உடுமலை கிளை கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
உடுமலை நகரத்தலைவர் பூபதி, செயலாளர் ரத்தினகுமார், சிவப்பிரகாசம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், மூலப்பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளதல், சவரத்தொழிலாளர் சங்கத்தின் கட்டணங்களை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.