/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுமியின் 8.5 சவரன் நகையை 'காலி' செய்த சிறுவனுக்கு காப்பு சிறுமியின் 8.5 சவரன் நகையை 'காலி' செய்த சிறுவனுக்கு காப்பு
சிறுமியின் 8.5 சவரன் நகையை 'காலி' செய்த சிறுவனுக்கு காப்பு
சிறுமியின் 8.5 சவரன் நகையை 'காலி' செய்த சிறுவனுக்கு காப்பு
சிறுமியின் 8.5 சவரன் நகையை 'காலி' செய்த சிறுவனுக்கு காப்பு
ADDED : ஜூன் 13, 2024 02:33 AM
திருப்பூர்:திருப்பூரைச் சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 'ரீல்ஸ்' வீடியோக்களை அதிகம் பதிவிடும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. மொபைல் போனை வாங்கித் தரும்படி, அந்த சிறுவனிடம் சிறுமி கேட்டார். 'பணம் இல்லை; நீ பணம் கொண்டு வா, வாங்கி தருகிறேன்' என்றார், அந்த சிறுவர்.
அதனால், வீட்டிலிருந்த, 8.5 சவரன் நகையை எடுத்து கொண்டு சிறுவனை சென்று சிறுமி சந்தித்தார். சிறுவன் தனக்கு தெரிந்த சிலரிடம் நகையை அடகு வைத்தார். கிடைத்த பணத்தில், 42,000 ரூபாயை சிறுமியிடம் கொடுத்தார்.
மீதமிருந்த, 2 லட்சத்து, 60,000 ரூபாயில், சிறுமிக்கு, 1 லட்சம் ரூபாய்க்கு ஐபோனும், தனக்கு பைக் ஒன்றையும் வாங்கினார். இருவரும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பல நாட்களாக சுற்றினர். சில நாட்களுக்கு முன், வீட்டிலிருந்த நகை காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு தெரிந்தது. சிறுமியிடம் இருந்த புதிய மொபைல் போனை பார்த்து சந்தேகமடைந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். நகையை எடுத்துச் சென்று, சிறுவனிடம் கொடுத்து விற்றதைக் கூறினார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், 17 வயது சிறுவன் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.