ADDED : ஜூன் 25, 2024 12:52 AM
அவிநாசி:அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாமில், 11வது வார்டுக்குட்பட்ட காமராஜர் வீதி, பாரதிதாசன் வீதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
காமராஜர் வீதி, பாரதிதாசன் வீதி பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஒருவர் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வந்தார். தற்போது சுத்திகரிப்பு நிலையம் துவங்கி, அதன் மூலம் தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்.
சுத்திகரிப்பு நிலையத்தில் மீதமாகும் உப்பு நீரை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விடப்படுகிறது. எங்கள் வீட்டு ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து உப்புத்தன்மை அதிகரித்துள்ளது.
தண்ணீர் விற்பனை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.