/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மானிய விலையில் ஜிப்சம் விவசாயிகளுக்கு விற்பனை மானிய விலையில் ஜிப்சம் விவசாயிகளுக்கு விற்பனை
மானிய விலையில் ஜிப்சம் விவசாயிகளுக்கு விற்பனை
மானிய விலையில் ஜிப்சம் விவசாயிகளுக்கு விற்பனை
மானிய விலையில் ஜிப்சம் விவசாயிகளுக்கு விற்பனை
ADDED : மார் 11, 2025 09:52 PM
உடுமலை, ;விவசாயிகளுக்கு மானிய விலையில் ஜிப்சம் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை வேளாண்துறை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் கிடங்கில், விவசாயிகள் களர் நிலங்களை சீர்படுத்தவும், மண்ணை வளப்படுத்தவும் தேவைப்படும் ஜிப்சம் உரம் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், விவசாயிகளுக்கு தேவையான பவர் ஸ்பிரேயர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வந்து பயன்பெறலாம், என வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.