/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சகோதயா விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி அபாரம் சகோதயா விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
சகோதயா விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
சகோதயா விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
சகோதயா விளையாட்டு பிரன்ட்லைன் பள்ளி அபாரம்
ADDED : ஜூலை 31, 2024 12:20 AM
திருப்பூர்:திருப்பூர் மற்றும் கோவை சகோதயா சார்பில், திருப்பூர் ஸ்ப்ரிங்க் மவுன்ட் பள்ளி மற்றும் கோவை வித்யாமந்திர் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில்,பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர். 12 வயது பிரிவு, ஸ்கேட்டிங் போட்டியில், 5ம் வகுப்பு மாணவி வர்ஷிதா, 200 மீ., 300 மீ., இன்லைன் போட்டியில் முதல் பரிசு. 16 வயது பிரிவு, ஸ்கேட்டிங் போட்டியில், 9ம் வகுப்பு மாணவர் பிரணவ், 200 மீ., 300 மீ., குவாட் போட்டியில் முதல் பரிசு பெற்றனர்.
அடுத்து, 14 வயது பிரிவு, அம்பு எறிதலில், 8ம் வகுப்பு மாணவர் சஷ்விந்த் ஸ்ரீ, மூன்றாமிடம். 17 வயது பிரிவில், அம்பு எறிதலில், 9ம் வகுப்பு மாணவர் ஜெயப்ரணவ் மூன்றாமிடம் பிடித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி மற்றும் பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமையாசிரியை கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.