/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய ஒற்றையர் கேரம் போட்டி: மகாராஷ்டிரா வீரர் முதலிடம் தேசிய ஒற்றையர் கேரம் போட்டி: மகாராஷ்டிரா வீரர் முதலிடம்
தேசிய ஒற்றையர் கேரம் போட்டி: மகாராஷ்டிரா வீரர் முதலிடம்
தேசிய ஒற்றையர் கேரம் போட்டி: மகாராஷ்டிரா வீரர் முதலிடம்
தேசிய ஒற்றையர் கேரம் போட்டி: மகாராஷ்டிரா வீரர் முதலிடம்
ADDED : ஜூலை 31, 2024 12:20 AM

திருப்பூர்:முன்னாள் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி மற்றும் முத்தம்மாள் அறக்கட்டளை சார்பில், தேசிய அளவிலான ஒற்றையர் கேரம் போட்டி திருப்பூரில் நடந்தது.
இதில், முதலிடம் பெற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த முகம்மது குபுரானுக்கு கோப்பையும் ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த அப்துல் ஆசிப் இரண்டாமிடம், மூன்றாமிடம் கோவையைச் சேர்ந்த யோகேஷ் டோஸ்ரே, நான்காமிடம் சென்னையைச் சேர்ந்த சகாய பாரதி ஆகியோருக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு முத்தம்மாள் அறக்கட்டளை தலைவர் திலக்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத் வரவேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு, எம்.எல்.ஏ., செல்வராஜ் பரிசளித்து பேசினார். முன்னதாக, முதலிடம் பெற்றவருக்கு ஒரு பவுன் தங்க நாணயமும் மற்ற வெற்றியாளர்களக்கு தலா அரை பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை, திருப்பூர் மாவட்ட கபடி குழு தலைவர் ஜியோ செல்வராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், நகர செயலாளர் நாகராஜ், மாணவர் அணி மாநில துணை யெலாளர் பொன்ராஜ், கேரம் சங்க மாநில செயலாளர் மரிய இருதயம், மாவட்ட செயலாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ---
தேசிய ஒற்றையர் கேரம் போட்டியில், முதலிடம் பெற்ற மகாராஷ்டிரா வீரருக்கு கோப்பை பரிசளிக்கப்பட்டது.