/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'குட்கா' விற்பனை ரூ.1.50 லட்சம் அபராதம் 'குட்கா' விற்பனை ரூ.1.50 லட்சம் அபராதம்
'குட்கா' விற்பனை ரூ.1.50 லட்சம் அபராதம்
'குட்கா' விற்பனை ரூ.1.50 லட்சம் அபராதம்
'குட்கா' விற்பனை ரூ.1.50 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 12, 2024 01:50 AM
திருப்பூர்;திருப்பூரில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த, ஆறு கடைகளுக்கு சீல் வைத்து, 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட கடைகள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல், அபராதம் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் லட்சுமி நகர், மில்லர் பஸ் ஸ்டாப், மும்மூர்த்தி நகர், ஏ.பி.டி., ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
நான்கு பெட்டிக்கடை, பேக்கரி, ஓட்டல் என, ஆறு கடைகளில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்தது தெரிந்தது. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு 'சீல்' வைத்து, தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் காலாவதியான, 30 கிலோ பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு, 2 ஆயிரம் ரூபாய் என, 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.