/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கடமான் வேட்டையாடிய ஐந்து பேர் சுற்றிவளைப்பு கடமான் வேட்டையாடிய ஐந்து பேர் சுற்றிவளைப்பு
கடமான் வேட்டையாடிய ஐந்து பேர் சுற்றிவளைப்பு
கடமான் வேட்டையாடிய ஐந்து பேர் சுற்றிவளைப்பு
கடமான் வேட்டையாடிய ஐந்து பேர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 29, 2024 11:17 PM

உடுமலை : திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை, அமராவதி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட ஜம்புக்கல்கரடு பகுதியில், கடமானை வேட்டையாடிய ஐந்து பேரை, வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து, 4.600 கிலோ மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜம்புக்கல்கரடு மலைப்பகுதியில் கடமானை, கண்ணி வைத்து வேட்டையாடி, துண்டுகளாக்கி கூறு போட்டு விற்பனை செய்தது தெரிந்தது.
மான் மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டு, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மலையாண்டி கவுண்டனுாரைச் சேர்ந்த பிரபு, 24; பரதராமன், 43, உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.