ADDED : ஜூன் 29, 2024 01:44 AM
அவிநாசியில், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி, எஸ்.ஐ., கிருஷ்ணன், பொன்குணசேகர் உள்ளிட்ட போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவிநாசி மடத்துப்பாளையம் குமார், 60, வாணியர் வீதி சுரேஷ், 51,ஆகியோரிடம் இருந்து 1,050 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். எம்.எஸ்., நகர் வடிவேலு, 38, வாணியர் வீதி சேகர், 65, ஆகியோரிடம் இருந்து 1,050 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.