/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 24, 2024 12:36 AM
உடுமலை;தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க, உடுமலை கிளை செயலாளர்கள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. துணைத்தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். சங்கத்தலைவர் மணி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ் சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
ஓய்வுபெறும் போது கமுட்டேஷன் தொகை, 12 ஆண்டுகளாக நடைமுறைக்கு கொண்டு வருதல், மூத்தகுடிமக்களுக்கு ரயில் பயணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்குதல், ஓய்வூதியர்களுக்கு, 80 வயது நிறைவடைந்த பின் அரசு வழங்கும் தொகையை, 79 வயது நிறைவடைந்த பின்னரே, 20 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.