/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்! மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
மங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்!
ADDED : ஜூலை 23, 2024 11:39 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் துவங்கும் மங்கலம் ரோடு, கருவம்பாளையம், பழக்குடோன், பாரப்பாளையம், பெரியாண்டிபாளையம் பிரிவு வழியாக அமைந்துள்ளது. முக்கியமான ரோடு என்ற நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள ரோடு என்பதால் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. ரோட்டில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகம். ஏற்கனவே, குறுகிய வளைவு மற்றும் பிரிவு ரோடுகள் சில இடங்களில் உள்ள காரணத்தால், வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து நெருக்கடி சகஜமாக உள்ளது.
ரோட்டோர கட்டட மற்றும் கடை உரிமையாளர்கள் பந்தல், ெஷட், மேடை அமைத்தும், பொருட்களை பரப்பியும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுதவிர, கடைக்கு வரும் வாகனங்கள் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதும் வாடிக்கை.
இது குறித்த தொடர் புகார்கள் மற்றும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர்.
மாநகராட்சி அலுவலக சந்திப்பு முதல் பெரியாண்டிபாளையம் ரிங் ரோடு பகுதி வரை இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகள் முன் இருந்த தகர ெஷட், பந்தல், விளம்பர மற்றும் பெயர்ப்பலகைகள், பேனர்கள் ஆகியன பொக்லைன் வைத்து அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மங்கலம் ரோடு தற்போது சற்று விசாலமாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.