/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பஸ்களை இயக்க வேண்டும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 11:39 PM
அனுப்பர்பாளையம்:திருப்பூர், குமார் நகர் வழியாக காவிலிபாளையம் மற்றும் புதுார் வழியில், 39 மற்றும் 47டி ஆகிய இரு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக, பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. பணி நிறைவு பெற்று கூட, பஸ் இயக்கப்படவில்லை.
இதனால், பொதுமக்கள் நீண்ட தொலைவில் உள்ள குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவியர், காலை மற்றும் மாலை நேரத்தில், 20 ரூபாய் கொடுத்து ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இதேபோல், பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வலியுறுத்தி, பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நிறுத்தப்பட்ட இரு பஸ்களை இயக்க வேண்டுகோள் விடுத்து, கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் நேற்று காலை சிறுபூலுவபட்டி, காவிலிபாளையம் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.