ADDED : ஜூலை 10, 2024 12:07 AM
திருப்பூர்;மண்ணரை ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, வேறு ஊழியர் நியமிக்கப்பட்டார்.
திருப்பூர், கே.செட்டிபாளையம் வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை மண்ணரையில் உள்ளது. இதில், கவுதம் கார்த்திக், 26 விற்பனையாளராக உள்ளார்.
கடந்த வாரம் கவுதம் கார்த்திக் ரேஷன் கடையை திறக்கவில்லை. எந்த தகவலும் இன்றி அவர் மூன்று நாட்களாக பணிக்கும் வரவில்லை.
இது குறித்து, கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில், பொருள் இருப்பில் குறைகள் இருந்தது தெரிந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாற்று ஏற்பாடாக வேறொரு கடை ஊழியர் அங்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர் மீது ஏற்கனவே, கடையை முறையாகத் திறப்பதில்லை என்ற புகார் ஏற்பட்டு, 'மெமோ' அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.