'வனம்' - ரோட்டரி சங்கம் ஒப்பந்தம்
'வனம்' - ரோட்டரி சங்கம் ஒப்பந்தம்
'வனம்' - ரோட்டரி சங்கம் ஒப்பந்தம்
ADDED : ஜூலை 10, 2024 12:07 AM

பல்லடம்;பல்லடம் 'வனம்' அமைப்புடன், ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், ஒவ்வொரு மாதமும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், பல்லடம் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கியுடன் இணைந்து, 'வனம்' அமைப்பு அடுத்த ஓராண்டுக்கு மாதாந்திர ரத்ததான முகாம் இணைந்து நடத்துவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி, வனாலயம் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 'வனம்' அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். ரத்த வங்கியின் பொருளாளர் செந்தில்குமார், அறங்காவலர் ராஜ்குமார், 'வனம்' செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். முன்னதாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சுந்தர்ராஜ் வழங்க, செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.