/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேஷன் ஊழியர் 'ஸ்டிரைக்' கார்டுதாரர்கள் ஏமாற்றம் ரேஷன் ஊழியர் 'ஸ்டிரைக்' கார்டுதாரர்கள் ஏமாற்றம்
ரேஷன் ஊழியர் 'ஸ்டிரைக்' கார்டுதாரர்கள் ஏமாற்றம்
ரேஷன் ஊழியர் 'ஸ்டிரைக்' கார்டுதாரர்கள் ஏமாற்றம்
ரேஷன் ஊழியர் 'ஸ்டிரைக்' கார்டுதாரர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூன் 04, 2024 12:29 AM
திருப்பூர்:தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு அனைத்து பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் பணியாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு குறைவுக்கான அபராதத்தை இருமடங்காக உயர்த்தியது; எடை குறைவாக பொருட்கள் வழங்குவது. பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் பழுதுக்கு, விற்பனையாளர்களை பொறுப்பாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. 'டாக்பியா' சங்கம் சார்ந்த விற்பனையாளர்கள் பணிபுரியும், 700 ரேஷன் கடைகள் மட்டும் நேற்று திறக்கப்படவில்லை. இதனால், அந்த ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த கார்டுதாரர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.