/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரிதாக வரும் மக்கள்; துரத்தும் குரங்கு! அணைப்பூங்காவில் பரிதாபம் அரிதாக வரும் மக்கள்; துரத்தும் குரங்கு! அணைப்பூங்காவில் பரிதாபம்
அரிதாக வரும் மக்கள்; துரத்தும் குரங்கு! அணைப்பூங்காவில் பரிதாபம்
அரிதாக வரும் மக்கள்; துரத்தும் குரங்கு! அணைப்பூங்காவில் பரிதாபம்
அரிதாக வரும் மக்கள்; துரத்தும் குரங்கு! அணைப்பூங்காவில் பரிதாபம்
ADDED : ஜூன் 03, 2024 12:18 AM

உடுமலை:அணைப்பூங்காவுக்கு அரிதாக வரும் சுற்றுலா பயணியரையும், தொல்லை செய்யும், குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருக்கின்றனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மற்றும் பூங்கா முன்பு சுற்றுலா தலமாக இருந்தது. நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல், அணைப்பூங்கா பரிதாப நிலைக்கு மாறி விட்டது.
எவ்வித சுற்றுலா அம்சங்களும் இல்லாத பூங்காவுக்கு, சுற்றுலா பயணியர் வருவதே அரிதாகி விட்டது. கோடை விடுமுறை காலத்தில், அனைத்து சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிந்த நிலையில், அமராவதி அணைப்பூங்கா யாரும் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பூங்காவை முற்றிலுமாக தங்களுக்கான பகுதியாக மாற்றிக்கொண்டன. எப்போதாவது அமராவதி அணைக்கு வரும் சுற்றுலா துறை அதிகாரிகளும், போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பி விடுகின்றனர்.
இப்பிரச்னை குறித்து, மாவட்ட சுற்றுலாத்துறையும், பொதுப்பணித்துறையும், நீண்ட காலமாக கண்டுகொள்ளாத நிலையில், அரிதாக வரும் சுற்றுலா பயணியரை அங்குள்ள குரங்குகள் அதிக தொல்லை செய்ய துவங்கியது.
குறிப்பாக, ஒரு பெரிய குரங்கு, உணவு வழங்காத மக்களை தாக்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வனத்துறை சார்பில் அந்த குரங்கை பிடிக்க, பூங்கா அருகில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த குரங்கு பிடிபடவில்லை. பொதுப்பணித்துறையும், சுற்றுலாத்துறையும், பூங்காவை நீண்ட காலமாக கண்டுகொள்ளாத நிலையில், பூங்கா முழுவதையும், வனப்பகுதியாகவே பராமரித்தால், சுற்றுச்சூழலாவது மேம்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.