/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குரூப் தேர்வு எழுதப்போறீங்களா? இலவச பயிற்சி துவங்கியாச்சு குரூப் தேர்வு எழுதப்போறீங்களா? இலவச பயிற்சி துவங்கியாச்சு
குரூப் தேர்வு எழுதப்போறீங்களா? இலவச பயிற்சி துவங்கியாச்சு
குரூப் தேர்வு எழுதப்போறீங்களா? இலவச பயிற்சி துவங்கியாச்சு
குரூப் தேர்வு எழுதப்போறீங்களா? இலவச பயிற்சி துவங்கியாச்சு
ADDED : ஜூன் 03, 2024 12:25 AM
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, துவங்கியுள்ளது.
குரூப் 1 தேர்வு, வரும் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 1 மற்றும் குரூப் - 2 தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கியுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் பயிற்சி வகுப்பை துவக்கிவைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த குரூப் தேர்வு எழுத உள்ள 90 பேர் பயிற்சி வகுப்பில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைவரை, காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கூறுகையில், ''மாவட்டத்தில் குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுதுவோர், இலவச பயிற்சி வகுப்பில் இணைய விரும்புவோர், 0421 2999152, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்யலாம்,'' என்றார்.