Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குளக்கரை, நீர் வழிப்பாதை 'வளைப்பு' வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம்

குளக்கரை, நீர் வழிப்பாதை 'வளைப்பு' வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம்

குளக்கரை, நீர் வழிப்பாதை 'வளைப்பு' வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம்

குளக்கரை, நீர் வழிப்பாதை 'வளைப்பு' வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம்

ADDED : ஜூன் 29, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
அவிநாசி;அவிநாசி தாமரைக்குளக் கரையோரம் மற்றும் சங்கமாங்குளத்திற்கான பிரதான நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை அவசியம்.

அவிநாசியில் உள்ள தாமரைக்குளத்தின் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. வீடுகள் இல்லாதோர் தற்காலிக டெண்ட், சிமென்ட் சீட் ஆகியவற்றைக் கொண்டு வீடுகளை அமைத்துள்ளனர். ஒரு ஆண்டு முன்பு குளக்கரை மேற்குப் பகுதியில் கோவில் பூசாரி ஒருவர் கூடுதலாக ஹாலோபிளாக் கற்கள் வைத்து கட்டடத்தை எழுப்பி ஆக்கிரமித்தார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பொதுப்பணித்துறையினர் பெயரளவில் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு சில அடி துாரத்திற்கு கம்பி வேலி அமைத்தனர்.

சத்தமின்றி ஆக்கிரமிப்பு

கடந்த சில நாட்களாக, தாமரைக்குளத்திற்கு இறங்கும் வழியில் தகர செட் அமைத்து ஜோதிடம், ஜாதகம் பார்ப்பதாக ஒருவர் விளம்பரப் பலகை வைத்துள்ளார்.

இதேபோல், அவிநாசியில் இருந்து நடுவச்சேரி செல்லும் வழியில் ராயம்பாளையம் பிரிவில் உள்ள நீர் வழித்தடத்தில் அப்பகுதியில் வசிக்கும் நபர் கடந்த ஒரு மாத காலமாக நிலத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி வருகிறார்.

வெள்ளம் புகும் அபாயம்

நடுவச்சேரி, ராவுத்தம்பாளையம், சின்னேரிபாளையம் வழியாக அவிநாசி சங்கமாங்குளத்திற்கு மழைநீர் வெள்ளம் செல்லும் பிரதான நீர் வழித்தடமாக உள்ள பாதையில் ஆக்கிரமிப்பு செய்து இக்கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் தடுக்கப்பட்டு ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் துவக்க வேண்டும்; நீர் வழித்தடங்களில் உள்ள முள் புதர்களை அகற்றி தடையில்லாமல் குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தவும் வேண்டும்.

---

அவிநாசி, தாமரைக்குளக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தகர 'ெஷட்'.

ராயம்பாளையம் பிரிவில், சங்கமாங்குளத்துக்கு மழைநீர் செல்லும் வழித்தடத்தில் கோவில் கட்டப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us