/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பொதுமக்கள் நெரிசல்: ஒழுங்குபடுத்த போலீஸ் பொதுமக்கள் நெரிசல்: ஒழுங்குபடுத்த போலீஸ்
பொதுமக்கள் நெரிசல்: ஒழுங்குபடுத்த போலீஸ்
பொதுமக்கள் நெரிசல்: ஒழுங்குபடுத்த போலீஸ்
பொதுமக்கள் நெரிசல்: ஒழுங்குபடுத்த போலீஸ்
ADDED : ஜூலை 10, 2024 12:10 AM

திருப்பூர்;திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள பஸ் ஸ்டாப் மிகவும் நெருக்கடியான இடத்தில் அமைந்துள்ளது.
தினமும், ஆயிரக்கணக்கானோர் இந்த பஸ் ஸ்டாப் பகுதியைப் பயன்படுத்துகின்றனர். மேலும், காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களில் பஸ்கள் முறையாக பஸ் ஸ்டாப்பில் நிறுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படும் நிலை காணப்பட்டது. இதனால் தினமும் சிறு விபத்துகள் ஏற்படுவது, பஸ் பயணிகள் அவதிப்படுவதும் சகஜமாக மாறி விட்டது. இப்பகுதியில் போலீசார் பணியமர்த்தப்பட்டு, பஸ்கள் முறையாக நின்று செல்லவும், மக்கள் பாதுகாப்பாக பஸ் ஏறி இறங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, 'தினமலர்' திருப்பூர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பஸ்களையும், மக்களையும் முறைப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.