/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மனமகிழ் மன்றம் முற்றுகையிட திட்டம் மனமகிழ் மன்றம் முற்றுகையிட திட்டம்
மனமகிழ் மன்றம் முற்றுகையிட திட்டம்
மனமகிழ் மன்றம் முற்றுகையிட திட்டம்
மனமகிழ் மன்றம் முற்றுகையிட திட்டம்
ADDED : ஜூலை 17, 2024 01:19 AM

அவிநாசி:அவிநாசியில் உள்ள மனமகிழ் மன்றத்தை முற்றுகையிட்டு, அகற்ற வலியுறுத்தப்படும் என்று, அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகள் அறிவித்துள்ளன.
அவிநாசி பேரூராட்சி, சிந்தாமணி பஸ் ஸ்டாப் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில், மதுபானக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அகற்ற வலியுறுத்தியும் நடத்தப்படும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், மா.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, அ.தி.மு.க., நகர துணை செயலாளர் மூர்த்தி, ம.தி.மு.க., நிர்வாகி பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேவாலயம், மருத்துவமனை, பண்ணாரி அம்மன் கோவில், 1,200 மாணவியர் படிக்கும் பள்ளி, வீடுகள் உள்ள இடத்தில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் திறக்கப்பட்டுள்ளது. வரும், 19ம் தேதி இதனை முற்றுகையிட்டு, மூட வலியுறுத்தி போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.