ADDED : ஜூலை 17, 2024 08:38 PM
உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் நின்று சிரமப்பட வேண்டியதுள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர் பஸ்களும், டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு பல்வேறு ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணியர் வருகின்றனர். அவர்கள் அமர போதிய இருக்கைகள் இல்லை. எனவே, நகராட்சியினர் கூடுதலாக இருக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.