Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., கால்வாய்களை துார்வார வேண்டும்! ஒருமித்த குரல் எழுப்பிய பாசன விவசாயிகள்

பி.ஏ.பி., கால்வாய்களை துார்வார வேண்டும்! ஒருமித்த குரல் எழுப்பிய பாசன விவசாயிகள்

பி.ஏ.பி., கால்வாய்களை துார்வார வேண்டும்! ஒருமித்த குரல் எழுப்பிய பாசன விவசாயிகள்

பி.ஏ.பி., கால்வாய்களை துார்வார வேண்டும்! ஒருமித்த குரல் எழுப்பிய பாசன விவசாயிகள்

ADDED : ஜூலை 26, 2024 11:59 PM


Google News
திருப்பூர்;பி.ஏ.பி., இரண்டாவது மண்டல பாசனத்துக்கு வரும் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்முன், பிரதான, கிளை கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்தவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திவருகின்றனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்திலும், கால்வாய்களை துார்வார வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக ஒலித்தது.

பி.ஏ.பி., பாலாறு படுகை பகிர்மான குழு தலைவர் கோபால்:

பி.ஏ.பி., 2ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும்முன் அனைத்து கிளை கால்வாய்களும் துார்வாரப்படவேண்டும். அமைச்சர் மற்றும் கலெக்டரை சந்தித்து, கால்வாய் துார்வாரும் பணிகளுக்காக, அந்தந்த கிராம நீரினை பயன்படுத்தும் சங்கங்களுக்கு நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். பி.ஏ.பி., கிளை கால்வாய்களை துார் வாரும் பணிகளுக்கான நிதியை விரைந்து விடுவிக்கவேண்டும்.

பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி:

பி.ஏ.பி., மிகவும் ஆழமான கான்கிரீட் கால்வாயை, நுாறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு எப்படி துார்வாரமுடியும்; கால்வாயில் உள்ள புற்களை மட்டும்தான் வெட்டமுடியும். நுாறு நாள் திட்டத்தில் பி.ஏ.பி., கால்வாயை துார்வாருவதற்கு சட்டத்தில் இடமில்லை.

கடந்தாண்டு, பாசன சபை தலைவர்களே சொந்த பணத்தை செலவழித்து, கால்வாயை துார்வாரினோம். அப்போது, 'உங்களை யார் சொந்த செலவில் கால்வாய் சுத்தம் செய்யச்சொன்னது,' என, பி.ஏ.பி., அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். ஒவ்வொருமுறையும் பாசன சபை தலைவர்களே சொந்த செலவில் கால்வாயை துார்வாரமுடியாது. சரியான வழிமுறைகளை பின்பற்றி, பி.ஏ.பி., கால்வாய்களை துார்வாரவேண்டும், என்றார்.

பி.ஏ.பி., உடுமலை செயற்பொறியாளர் மகேந்திரன் பேசுகையில், 'எங்களுக்கு கடந்தாண்டைவிட இந்தாண்டு, 15 சதவீதம் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி., பிரதான கால்வாய்களை நாங்கள் சுத்தம் செய்து கொடுத்து விடுகிறோம். பகிர்மான கால்வாய்களை, நமக்குநாமே திட்டம், நுாறுநாள் வேலை திட்டங்களில் துார்வார திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.

'நுாறுநாள் வேலை திட்டத்தில், பி.ஏ.பி., கால்வாயை துார்வார முடியாது; அதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் எழும்' என விவசாயிகள் ஒருசேர குரல் எழுப்பினர்.

துார்வார

ஆலோசனை

-------------

விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், ''அமராவதி மற்றும் பி.ஏ.பி., கால்வாய்களை துார்வாருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ., நிதி பெற்றும், நமக்குநாமே திட்டத்தில் சில பணிகளையும், நுாறு நாள் திட்டங்களில் சில பணிகளை மேற்கொள்ளலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உகந்த திட்டங்களை பயன்படுத்தி, கால்வாய் துார்வாரும் பணி சிறப்பானவகையில் மேற்கொள்ளப்படும்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us