/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறுதானிய சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு சிறுதானிய சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு
சிறுதானிய சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு
சிறுதானிய சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு
சிறுதானிய சாகுபடி அதிகரிக்க வாய்ப்பு
ADDED : மார் 14, 2025 12:48 AM
பொங்கலுார்; மாசி பட்டம் துவங்கி உள்ளது. மாசி பட்ட சாகுபடி பங்குனி வரை நீடிக்கும். கடும் வெப்பம் நிலவும் மாசி, பங்குனி மாதங்களில் கம்பு, சோளம், திணை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் நன்கு வளரும். இதற்கு குறைவான தண்ணீர் இருந்தாலே போதுமானது.
தற்பொழுது சரியான நேரத்தில் மழை பெய்துள்ளது. பங்குனி, சித்திரை மாதங்களில் கோடை மழை தீவிரமடையும். தற்போது விதைக்கப்படும் சிறுதானியங்கள் வரும் மாதங்களில் பெய்யக் கூடிய மழைக்கு வளர்ந்து அறுவடைக்கு வந்துவிடும்.
தற்பொழுது பலரும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் மக்களிடம் பரவலாக நோய் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், சுகாதாரத்துறை சார்ந்த செலவுகள் அரசுக்கு பெரும் சுமையாக மாறி வருகின்றன. இதனால், மத்திய அரசு சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது.
தற்பொழுது மக்களிடமும் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகளிடம் மீண்டும் சிறுதானியம் சாகுபடி செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப தற்போது வருண பகவானின் கருணையும் கிடைத்துள்ளதால் நடப்பு ஆண்டில் சிறுதானியம் சாகுபடி அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.