ADDED : ஜூன் 29, 2024 01:36 AM

அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரியில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் பொதுக்கிணறு உள்ளது. அதன் அருகில், கீழ் மட்டத் தொட்டி அமைத்து குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊராட்சி அலுவலகம் - பொது கிணறு அமைந்துள்ள இடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் அமர்ந்து குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்கின்றனர்.
பாட்டில்களை உடைத்து போடுவதால், கண்ணாடி துண்டுகள் பொதுமக்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. மாணவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அங்கு மது அருந்த அனுமதிக்கக்கூடாது.