/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக., 1ல் சாலை மறியல் கம்யூ., கட்சிகள் முடிவு ஆக., 1ல் சாலை மறியல் கம்யூ., கட்சிகள் முடிவு
ஆக., 1ல் சாலை மறியல் கம்யூ., கட்சிகள் முடிவு
ஆக., 1ல் சாலை மறியல் கம்யூ., கட்சிகள் முடிவு
ஆக., 1ல் சாலை மறியல் கம்யூ., கட்சிகள் முடிவு
ADDED : ஜூலை 29, 2024 12:05 AM
திருப்பூர்:மத்திய பட்ஜெட்டை கண்டித்து, திருப்பூர் மாவட்டத்தில், எட்டு இடங்களில் சாலைமறியல் நடத்த, கம்யூ., கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்; மா.கம்யூ., கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன் மற்றும் இசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய அரசு பட்ஜெட், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், ஏழை களுக்கு துன்பம் அளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. வரும் ஆக., 1ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய எட்டு இடங்களில், சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.