/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பசுஞ்சோலையாக மாறும் ஓலைக்காடு தோட்டம்! பசுஞ்சோலையாக மாறும் ஓலைக்காடு தோட்டம்!
பசுஞ்சோலையாக மாறும் ஓலைக்காடு தோட்டம்!
பசுஞ்சோலையாக மாறும் ஓலைக்காடு தோட்டம்!
பசுஞ்சோலையாக மாறும் ஓலைக்காடு தோட்டம்!
ADDED : ஜூலை 16, 2024 01:41 AM

திருப்பூர:'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சீத்தா, மாதுளை, சப்போட்டா உட்பட, 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வெற்றி அமைப்பின், வனத்துக்குள் திருப்பூர் திட்டம், ஏராளமான பசுமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர் கரம் கோர்த்து செயல்படுத்தப்படும் பசுமை திட்டம். கடந்த, ஒன்பது ஆண்டுகளில், 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.
பத்தாவது திட்டத்தில், மரம் நட்டு வளர்க்க எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதன்காரணமாக, இரண்டு லட்சம் என்ற நடப்பு ஆண்டு இலக்கு, மூன்று லட்சம் மரக்கன்றுகளாக உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப, பசுமை படையும், களமிறங்கி, மரக்கன்று நட்டு வளர்ப்பதற்கான பணிகளை செய்து வருகின்றன.
விவசாயிகள், பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்புகின்றனர்; தண்ணீர் வசதியிருந்தும், வானம் பார்த்த பூமியாக இருந்த நிலங்களில், மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அவிநாசி அருகேயுள்ள தெக்கலுாரில் நேற்று மரக்கன்று நடவு நடந்தது.
தெக்கலுாரிலுள்ள ராசப்பன் - சின்னம்மாள் என்பவர்களுக்கு சொந்தமான ஓலைக்காடு தோட்டத்தில், மகோகனி - 200, தேக்கு - 100, நாவல் - 20, மாதுளை - 15, சப்போட்டா - 15, விளாமரம் - 10, சீத்தாப்பழம் - 10, பாதாம் -10, புளி -10, கொடுக்காப்புளி - 10 என, மொத்தம், 400 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.