/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 8ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு 8ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
8ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
8ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
8ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:41 AM
திருப்பூர்;அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில், ஆக., மாதம் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவுள்ளது.
இதற்காக, வரும், 18 முதல், 24ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 2024 ஆக., 1 அன்று, 12.5 வயது பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம், 125 ரூபாய், ஆன்லைன் பதிவு கட்டணம், 70 ரூபாய் என, 195 ரூபாய் பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.
முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பள்ளி பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றையும், ஏற் கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி, தோல்வியடைந்த, பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், இதற்கு முன் தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அனைத்து தனித்தேர்வர்களும், 42 ரூபாய் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.