/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூருக்கு பஸ் இல்லாததால் ஆவேசம்! போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு திருப்பூருக்கு பஸ் இல்லாததால் ஆவேசம்! போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு
திருப்பூருக்கு பஸ் இல்லாததால் ஆவேசம்! போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு
திருப்பூருக்கு பஸ் இல்லாததால் ஆவேசம்! போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு
திருப்பூருக்கு பஸ் இல்லாததால் ஆவேசம்! போராட்டத்துக்கு திரண்டதால் பரபரப்பு
ADDED : ஜூலை 24, 2024 12:50 AM
உடுமலை;உடுமலையிலிருந்து, திருப்பூருக்கு போதியளவு அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலையில், அரசு போக்குவரத்து கழக கிளை முன் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலையிலிருந்து, மாவட்ட தலைநகரமாக உள்ள திருப்பூருக்கு, அரசு அலுவலகங்கள், பனியன் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லுாரிகளுக்கும் அதிகளவு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
வழியோரத்திலும், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த பஸ்களிலேயே பயணித்து வருகின்றனர்.
உடுமலையிலிருந்து, காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கும் நிலையில், குறைந்தளவு பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன.
ஒரே பஸ்சில் இதனால், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை, திடீரென பஸ்கள் குறைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் 'ரேக்' பகுதியில் ஒரு பஸ் கூட இல்லை. இதனால், அதிருப்தியடைந்த மக்கள், அரசு போக்குவரத்து கழக கிளை முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறியதாவது:
உடுமலையிலிருந்து திருப்பூருக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் பயணித்து வரும் நிலையில், போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. அதிலும், காலை, மாலை நேரங்களில், ஒரே பஸ்சில் நுாற்றுக்கணக்கானவர்கள் நெரிசலுடன் பயணிக்க வேண்டியுள்ளது.
அதிலும், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில், திருவண்ணாமலை உள்ளிட்ட வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதோடு, உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடிவதில்லை.
எனவே, உடுமலையிலிருந்து திருப்பூருக்கு, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.