Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் தொகுதியில் 'நோட்டா' 5வது இடம்

திருப்பூர் தொகுதியில் 'நோட்டா' 5வது இடம்

திருப்பூர் தொகுதியில் 'நோட்டா' 5வது இடம்

திருப்பூர் தொகுதியில் 'நோட்டா' 5வது இடம்

ADDED : ஜூன் 05, 2024 10:34 PM


Google News
திருப்பூர் தொகுதியில் ஒன்பது வேட்பாளர்களை காட்டிலும் 'நோட்டா'வுக்கு கூடுதல் ஓட்டு பதிவாகியுள்ளது. பட்டியலில் ஐந்தாம் இடத்தை நோட்டா பெற்றுள்ளது.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இருந்து, வேட்பாளரில் யாருக்கும் ஓட்டளிக்காத, 'நோட்டா' அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக, ஏற்காடு இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.பிறகு, 2014 லோக்சபா தேர்தலில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளில், 5,82,062 ஓட்டுகள் என 1.4 சதவீதம் ஓட்டுகள் 'நோட்டா'வுக்கு பதிவானது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், 5,61,244 ஓட்டுகள் என, 1.31 சதவீதமாகவும், 2021 சட்டசபை தேர்தலில், 3,45,591 ஓட்டுகள் என 0.75 சதவீதமாகவும் இருந்தது.

2014 தேர்தல்


கடந்த 2014 லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில், 13,75,589 மொத்த வாக்காளர் எண்ணிக்கை. இதில், 10,36,249 பேர் ஓட்டளித்தனர். இது 76.38 சதவீதம். பதிவான ஓட்டுகளில், நோட்டாவுக்கு 13 ஆயிரத்து, 941 ஓட்டுகள் கிடைத்திருந்தன. இது, மொத்த ஓட்டுப்பதிவில், 1.35 சதவீதம்.

2019 தேர்தல்


கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில், 15,30,014 வாக்காளர் இருந்தனர். இதில், 11,15,693 பேர் என மொத்தம் 73.21 சதவீதம் பேர் ஓட்டளித்தனர். நோட்டாவுக்கு, 21,861 ஓட்டுகள் விழுந்திருந்தன; இது, மொத்த ஓட்டுப்பதிவில், 1.96 சதவீதமாக இருந்தது. முந்தைய 2014 தேர்தலை விட 0.61 சதவீதம் நோட்டாவுக்கான ஓட்டு அதிகரித்திருந்தது.

2024 தேர்தல்


தற்போதைய தேர்தலில், தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16,08,521 ஆகும். இதில், 11,43,624 பேர் ஓட்டளித்தனர். 70.65 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

நோட்டாவுக்கு 17,554 ஓட்டுகள் என, 1.56 சதவீதம் ஓட்டு பதிவாகியிருந்தது. இதில் 183 ஓட்டுகள் தபால் ஓட்டுகளில் பெறப்பட்டிருந்தது.களத்தில் போட்டியிட்ட 13 பேரில், நான்கு முக்கிய கட்சி வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள 9 பேரும் நோட்டாவை விடக் குறைவான ஓட்டுகள் மட்டுமே பெற்றனர். கடந்த, 2019 தேர்தலை காட்டிலும், நோட்டாவுக்கு பதிவான ஓட்டுகளில், 4,124 ஓட்டுகள் குறைந்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us