11 வேட்பாளர்கள் டிபாசிட் பறிபோனது
11 வேட்பாளர்கள் டிபாசிட் பறிபோனது
11 வேட்பாளர்கள் டிபாசிட் பறிபோனது
ADDED : ஜூன் 05, 2024 10:33 PM
திருப்பூர் லோக்சபா தேர்தலில், 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்றுமுன்தினம் நடந்த ஓட்டு எண்ணிக்கையில், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் 11 லட்சத்து 36 ஆயிரத்து 443 ஓட்டுகள்; 7,181 தபால் ஓட்டுகள் உள்பட, மொத்தம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 624 ஓட்டுகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வேட்பாளர்கள் செலுத்திய டிபாசிட் தொகையை திரும்பப்பெறுவதற்கு, பதிவான மொத்த ஓட்டுகளில், 6ல் ஒரு பங்கு ஓட்டு பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். அந்தவகையில், திருப்பூர் தொகுதியில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 604க்கு மேல் ஓட்டு பெற்ற வாக்காளருக்கு மட்டுமே டிபாசிட் கிடைக்கும்.
4 லட்சத்து 72 ஆயிரத்து 739 ஓட்டுகளுடன் தொகுதியின் வெற்றி வேட்பாளரான இந்திய கம்யூ., சுப்பராயன், 3 லட்சத்து 46 ஆயிரத்து 811 ஓட்டுகள் பெற்ற அ.தி.மு.க. அருணாணச்சலம் ஆகியோர் டிபாசிட் பெற்றுள்ளனர்.
பதிவான மொத்த ஓட்டுகளில் 6ல் ஒரு பங்குக்கும் குறைவான ஓட்டுகளையே பெற்ற பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.