/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை தி.மு.க., - -அ.தி.மு.க.,வினரால் சலசலப்பு அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை தி.மு.க., - -அ.தி.மு.க.,வினரால் சலசலப்பு
அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை தி.மு.க., - -அ.தி.மு.க.,வினரால் சலசலப்பு
அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை தி.மு.க., - -அ.தி.மு.க.,வினரால் சலசலப்பு
அமைச்சர் நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை தி.மு.க., - -அ.தி.மு.க.,வினரால் சலசலப்பு
ADDED : ஜூலை 26, 2024 11:54 PM

பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி அக்கணம்பாளையம் மற்றும் கணபதிபாளையம் கிராமங்களில், சமுதாய நலக்கூடம் மற்றும் பல் நோக்கு மைய கட்டடம் திறப்பு விழா மற்றும் பூமி பூஜை நேற்று நடந்தது.
அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களை அழைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'திறப்பு விழாவுக்கு ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகிய யாரையுமே அழைக்கவில்லை. இப்போது அழைக்குமாறு கூறினாலும் யாரும் அழைக்க தயாராகவும் இல்லை. இதில் எதற்காக அரசியல் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை' என, அக்கணம்பாளையம் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதேபோல், ஊராட்சித் தலைவர் - தி.மு.க., மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் என யாருக்குமே தகவல் தெரிவிக்கவில்லை. இது குறித்து பி.டி.ஓ.,விடம் கேட்டுக் கொள்ளுமாறு அமைச்சர் சாமிநாதன் கூறிச் சென்றார். பி.டி.ஓ., எந்த பதிலும் கூறவில்லை என, கணபதிபாளையம் பகுதியினர் கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, அமைச்சர் வருகைக்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், சலசலப்பு நிலவியது.