/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் மாநில எல்லையில் பரிசோதனை கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் மாநில எல்லையில் பரிசோதனை
கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் மாநில எல்லையில் பரிசோதனை
கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் மாநில எல்லையில் பரிசோதனை
கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் மாநில எல்லையில் பரிசோதனை
ADDED : ஜூலை 27, 2024 02:12 AM

உடுமலை;கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலல எல்லையான ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மாநில எல்லைகளில் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை - மூணாறு ரோட்டில், தமிழக - கேரளா எல்லையான ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், சுகாதாரத்துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வாகனங்களில் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு, 'நிபா' வைரஸ் பாதிப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால், மேல் சிகிச்சைக்காக, அமரவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையம், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள், என எரிசனம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.