/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 900 மனுக்கள் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 900 மனுக்கள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 900 மனுக்கள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 900 மனுக்கள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 900 மனுக்கள்
ADDED : ஜூலை 27, 2024 02:11 AM

உடுமலை;உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 900 மனுக்கள் பெறப்பட்டன.
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின் வாரியம், வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வே துறைகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் மனுக்கள் பதிவு செய்ய, தனியாக இ - சேவை மையம் அமைக்கப்பட்டிருந்தது.
முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், காப்பீடு திட்ட அட்டை, புதிய ரேஷன் கார்டு, மின் வாரியத்தில் பெயர் மாற்றம் என பல்வேறு துறைகள் சார்ந்து, 900 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில், ஊராட்சித்தலைவர் லதா காமாட்சி அய்யாவு, ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி, தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அரசின் அனைத்து துறைகளும் இடம் பெற்றிருந்த நிலையில், போலீஸ் துறை சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அத்துறைக்கு ஒதுக்கி, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த பகுதியில், பெயரை மாற்றி, சுகாதாரத்துறையினர் அமர்ந்திருந்தனர்.
போலீஸ் துறை சார்ந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.