Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'இயற்கை உணவே ஆரோக்கியம்'

'இயற்கை உணவே ஆரோக்கியம்'

'இயற்கை உணவே ஆரோக்கியம்'

'இயற்கை உணவே ஆரோக்கியம்'

ADDED : ஜூன் 08, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், உலக உணவு பாதுகாப்பு தினம் கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சவுமியா ஒருங்கிணைத்தார்.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து, பேசுகையில், 'மனிதன் உயிர் வாழ உணவு அவசியம். இயற்கை உணவு பாதுகாப்பு மட்டுமின்றி, உணவினால் பரவும் நோய்களைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தேவையற்ற உணவு மூலம் பரவும் நோய் ஆரோக்கியத்தை குறைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ இயற்கையோடு, இணைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்,' என்றார்.

என்.எஸ்.எஸ்., மாணவச் செயலர்கள் சுந்தரம், மது கார்த்திக், ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊட்டச்சத்து காய்கறி, சிறுதானியம், பழவகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us