ADDED : ஜூன் 11, 2024 12:06 AM
உடுமலை;மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற விழாவையொட்டி கிராமங்களில், இனிப்பு வழங்கி பா.ஜ.,வினர் உற்சாகமாக கொண்டாடினர்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி நேற்றுமுன்தினம் பதவியேற்றார். இவ்விழாவையொட்டி உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் கிராமங்களில், பா.ஜ., வினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கிராமங்களிலும் பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர். தேவனுார்புதுார், ஆண்டியூர், செல்லப்பம்பாளையம், சின்னப்புதுார் கிளை பா.ஜ., சார்பில், தேவனுார்புதுார் சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.