/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிக இடமாற்றம்? சுரங்கப்பாலம் பணி தீவிரமடைகிறது எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிக இடமாற்றம்? சுரங்கப்பாலம் பணி தீவிரமடைகிறது
எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிக இடமாற்றம்? சுரங்கப்பாலம் பணி தீவிரமடைகிறது
எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிக இடமாற்றம்? சுரங்கப்பாலம் பணி தீவிரமடைகிறது
எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிக இடமாற்றம்? சுரங்கப்பாலம் பணி தீவிரமடைகிறது
ADDED : ஜூலை 08, 2024 10:53 PM

திருப்பூர்:பார்க் ரோட்டில் சுரங்க பாலம் பணிக்காக எம்.ஜி.ஆர்., சிலை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடந்தது.
திருப்பூர் குமரன் ரோட்டைக் கடந்து செல்லும் வகையில் நொய்யல் ஆற்றை ஒட்டி, பார்க் ரோடு முதல் சுரங்க பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக பார்க் ரோடு பகுதியில் குறிப்பிட்ட அளவு பணி ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. குமரன் ரோட்டைக் கடந்து அமைந்துள்ள பகுதியில் இடம் கையகப்படுத்துவதில் பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் பல ஆண்டாக இழுபறியாகவே இருந்தது.
இப்பிரச்னைகள் நிறைவடைந்து, பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பார்க் ரோடு பகுதியில் இப்பணி தொடர வேண்டியுள்ளது. அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலை மற்றும் பீடம் அமைந்துள்ள இடத்தின் அருகே பணி மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதற்கு எந்த சேதமும் இன்றி பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக அந்த சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், மாநகராட்சி பொறியியல் பிரிவினர், நெடுஞ்சாலைத் துறையினர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அ.தி.மு.க., கவுன்சிலர் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, அன்பகம் திருப்பதி கூறியதாவது:
பாலம் கட்டுமானப் பணி தொய்வின்றி நடக்கும் வகையில் எம்.ஜி.ஆர்., சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்து, பணி முடிந்த பின் அதே இடத்தில் மீண்டும் அமைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.சிலையை அகற்றி மீண்டும் அதே இடத்தில் எந்த மாற்றமும் இன்றி அமைக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் அ.தி.மு.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்த வேண்டும். இது குறித்து எழுத்துபூர்வமான உறுதியை அதிகாரிகள் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இரண்டொரு நாளில் இதற்கான ஏற்பாடு செய்வதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.