/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்வதேச விளையாட்டு வீராங்கனைக்கு பதக்கம் சர்வதேச விளையாட்டு வீராங்கனைக்கு பதக்கம்
சர்வதேச விளையாட்டு வீராங்கனைக்கு பதக்கம்
சர்வதேச விளையாட்டு வீராங்கனைக்கு பதக்கம்
சர்வதேச விளையாட்டு வீராங்கனைக்கு பதக்கம்
ADDED : ஜூன் 02, 2024 11:44 PM
உடுமலை;இலங்கையில் நடந்த சர்வதேச விளையாட்டு போட்டியில், திருப்பூரை சேர்ந்த வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்.
இலங்கையில், சர்வதேச விளையாட்டு போட்டி, மே 25, 26ம் தேதிகளில் நடந்தது. கொழும்பு, சுகந்ததாசா விளையாட்டு மையத்தில் நடந்த மாஸ்டர் அதெலடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், திருப்பூர் மாவட்ட வெட்ரன் அசோசியேஷன் செயலாளர் சுமதி, 55 பங்கேற்று, சங்கிலி குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் தங்கம், குண்டுஎறிதலில் வெண்கலம் என மூன்று பதக்கங்களை கைப்பற்றினார்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, இலங்கையில் நடந்த மூத்தோருக்கான தடகள போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற ஒரேயொரு வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை, கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் பாராட்டினர்.