/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சத்துணவு மையங்களை தயார்படுத்த அறிவுறுத்தல் சத்துணவு மையங்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
சத்துணவு மையங்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
சத்துணவு மையங்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
சத்துணவு மையங்களை தயார்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 02, 2024 11:41 PM
உடுமலை:பள்ளி திறக்கப்படும் நாளில், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
கல்வியாண்டு, 2024 - 25 ஜூன் முதல் துவங்குகிறது. முதல் நாளில் பள்ளிகள் தயாராக இருப்பதற்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சத்துணவு மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, கல்வித்துறை வழிமுறைகளை அளித்துள்ளது.
விடுமுறை நிறைவடைந்து பள்ளி திறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, சத்துணவு பணியாளர்கள் மையங்களில் துாய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கு, 45 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களின் தேவைப்பட்டியலை, சேமிப்புக்கிடங்கு அலுவலகத்தில் ஒப்படைத்து, உணவுப்பொருட்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
சமையல் பணிகளுக்கு பயன்படுத்தும் குடிநீர் துாய்மையாக இருப்பதை, பணியாளர்கள் பரிசோதிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பான முறையில் தயார்படுத்த வேண்டும்.
சமைப்பதற்கு தேவையான பொருட்கள் சுகாதாரமாகவும், துாய்மையாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக முட்டைகளை வேக வைப்பதற்கு முன்பு, தண்ணீரிலிட்டு பரிசோதிக்க வேண்டும். சத்துணவு பாத்திரங்கள் அனைத்தும் துாய்மைப்படுத்த வேண்டும்.
சத்துணவு மையம், உணவு தயாரிக்கும் இடம், பரிமாறும் இடங்களில் பூச்சிகள் இல்லாமலும், உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
கல்வித்துறை வழங்கியுள்ள வழிமுறைகளின்படி, சத்துணவு மையத்தை தயார்படுத்துவதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.